காலிப்பணியிட விண்ணப்பம் தெற்கு ரயில்வே அறிவிப்பு
கோவை:தெற்கு ரயில்வேயில் உள்ள 'ஆக்ட் அப்ரெண்டிஸ்' காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயில், 'ஆக்ட் அப்ரெண்டிஸ்' காலிப்பணியிடங்களில், தகுதியான நபர்களை நியமிக்க, நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னை, பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் 1,343, திருச்சி பொன்மலை, மத்திய தொழிற்கூடத்தில், 527, கோவை போத்தனுார், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்கூடத்தில், 1,284 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதற்கு, மெட்ரிக் அல்லது ஐ.டி.ஐ., தகுதி உள்ள, 15 - 24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், www.sr.indianrailways.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு பயிற்சி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் நடைமுறைக்கட்டணம், ரூ.100 செலுத்த வேண்டும். வரும், 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, ரயில்வே துறை அறிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!