dinamalar telegram
Advertisement

மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாப பலி

வேலுார்:ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தம்பதி பலியாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த பெரிய குக்குண்டியைச் சேர்ந்தவர் சரவணன், 48; விவசாயி. இவரது மனைவி சாந்தி, 40; இவர்களது வீட்டின் அருகே உள்ள நிலத்திற்கு நேற்று காலை, 7:00 மணிக்கு இருவரும் நடந்து சென்றனர்.

அப்போது, சாலையில் கிடந்த மின்கம்பியை மிதித்த இருவரும், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.ஆற்காடு போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் காற்றுடன் மழை பெய்தபோது, மின் கம்பத்திலிருந்த மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதை கவனிக்காமல் சென்றபோது, இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement