dinamalar telegram
Advertisement

ரூ.14.71 கோடி சிக்கிய வழக்கில் நால்வர் கைது

ADVERTISEMENT
வேலுார்:'டோல்கேட்'டில், 14.71 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா, கோவிந்தம்பாடி சோதனைச் சாவடியில், சில நாட்களுக்கு முன் நள்ளிரவில், நான்கு பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரிக்கு பண்டல்களை மாற்றிக் கொண்டிருந்தது. ரோந்து போலீசார் நான்கு பேரையும் பிடித்து, பள்ளிகொண்டா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர்.

பண்டல்களில், 2,000, 500, 200, 100 ரூபாய் நோட்டுக்களாக மொத்தம், 14 கோடியே 70 லட்சம் ரூபாய் இருந்தது.பிடிபட்டவர்கள் கேரள மாநிலம், கோழிக்கோடு நாசர், 41, சர்புதீன், 27; சென்னை பிராட்வே நிசார் அகமது, 33; மதுரை, அங்காடிமங்கலம் வாசிம் அக்ரம், 19, என்பதும் தெரிந்தது. பிராட்வே, மண்ணடியிலிருந்து திருவனந்தபுரத்துக்கு ஹவாலா முறையில் கணக்கு காட்டாமல் பணத்தை கொண்டு சென்றதாகவும், அதற்கு கூலியாக, 10 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் தெரிவித்தனர். விசாரணையில் நான்கு பேரும் போலீசாரை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டியது, உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் சென்றது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பிடிபட்ட பணம் வேலுார் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. வருமான வரித்துறை விசாரணையும் நடக்கிறது' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement