ADVERTISEMENT
ஈரோடு:ஈரோடில், விசைத்தறி கூடம் தீப்பற்றியதில், வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தொழிலாளி, உடல் கருகி பலியானார்.
ஈரோடு அருகே பெரிய வலசு, கொத்துக்கார வீதியில், ஈரோடைச் சேர்ந்த பெரியசாமி என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் உள்ளது.ஈரோடைச் சேர்ந்த நீலமேகம், செந்தில் குபேரன்; சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விஜயன், 40, ஆகியோர் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

மூவருமே நேற்று முன்தினம் தான் முதல் நாளாக பணியில் சேர்ந்திருந்தனர். மதியம் சாப்பிடுவதற்காக உரிமையாளர் பெரியசாமி வெளியே சென்றிருந்தார். மூவரும் தறிகளை ஓட்டிக் கொண்டிருந்தனர்.அப்போது, பட்டறையில் இருந்த மின் மோட்டார் வெடித்து தீப்பிடித்தது. இதில் தறியுடன் இணைந்திருந்த ஒரு மரக்கட்டை நீலமேகம் தோளில் விழுந்தது.அவர் லேசான காயத்துடனும், செந்தில் குபேரன் காயமின்றியும் வெளியேறி விட்டனர்.
விசைத்தறி கூடத்தின் கடைசி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளி விஜயனால், வெளியே ஓடி வர முடியவில்லை.அதே சமயம், விசைத்தறி கூடம் முழுதும் தீ பரவி விட்டது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகே கருகிய நிலையில் விஜயன் உடலை மீட்க முடிந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!