dinamalar telegram
Advertisement

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் முறைகேடு இரு அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்

ADVERTISEMENT
ஈரோடு:ஈரோடு ஆவின் நிறுவனத்தில் முறைகேடுகளை கண்டறிந்த அமைச்சர், இரு அதிகாரிகளை அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஈரோடுக்கு நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வந்தார். சித்தோட்டில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஈரோடில் தங்கிய அவர், சென்னிமலை சாலையில் உள்ள, ஆவின் நிறுவனத்துடன் கூடிய, மாவட்ட கூட்டுறவு கால்நடை தீவன உற்பத்தி ஆலையில், நேற்று காலை ஆய்வில் ஈடுபட்டார்.

கால்நடை தீவனம், பேக்கிங் செய்யப்படும் முறை, பாலித்தீன் கவர் விபரம், பதிவேடு பராமரிப்பு போன்றவைகளில் பல குறைபாடுகளை கண்டறிந்தார். தீவன உற்பத்தி தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கூட சரியான விபரம், சத்து, கலப்பு பொருட்கள் என ஏதும் தெரியாமல் சமாளித்தனர். அவர்களை அமைச்சர் கடிந்து கொண்டார்.
பின், அமைச்சர் நாசர் கூறியதாவது:கடந்த ஆட்சியில், 10 டன் இனிப்பு உள்ளிட்ட பண்டங்கள் கெட்டுப்போனது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்தாண்டு, 85 கோடி ரூபாய்க்கு தீபாவளி இனிப்பு வகை விற்றது.
நடப்பாண்டு, 200 - 250 கோடி ரூபாய்க்கு இலக்கு வைத்துள்ளோம். இவ்வாறு கூறினார். முறைகேடில் ஈடுபட்டதாக செயற்பணியாளர் ரவிச்சந்திரன், துணை மேலாளர் முகம்மது முஸ்தபா ஆகியோர், அமைச்சர் உத்தரவில், நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆடையை சுத்தம் செய்த அதிகாரி!


ஆவின் கால்நடை தீவன உற்பத்தி ஆலையை அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர். அப்போது, 80க்கும் மேற்பட்டோர் வந்தனர். அனைவரின் ஆடைகளிலும் தீவன துாசி படிந்தது. ஆலையை விட்டு வெளியே வந்த அமைச்சர், 'ஆடை மற்றும் ஷூ துாசியாக உள்ளதே' எனக் கூறியதும், 'உள்ளே வாருங்கள்' என, மூட்டை பேக் செய்யும் இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அதிகாரி ஒருவர், ஏர் டியூப் மூலம் அமைச்சர் ஷூ, ஆடையில், காற்றை அழுத்தமாக அடித்து சுத்தம் செய்தார்.
கலெக்டரின் செருப்பு மற்றும் ஆடைகளையும் சுத்தம் செய்தார். ஒரு கட்டத்தில் சுதாரித்த கலெக்டர், அதிகாரியிடம் டியூப்பை வாங்கி, தனக்குத்தானே 'ஏர்' மூலம் சுத்தம் செய்து கொண்டார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement