dinamalar telegram
Advertisement

ரேஷன் பொருள் கடத்தல் 7 நாளில் 185 பேர் கைது

சென்னை: ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்களை, சிலர் கள்ளச் சந்தையில் விற்று வருகின்றனர்.


இதை தடுக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அலுவலர்கள், தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை, கள்ளச்சந்தையில் விற்க கடத்தப்பட்ட, 20.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 3.57 லட்சம் கிலோ அரிசி, 57 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றச் செயலில் ஈடுபட்ட 185 பேர் கைது செய்யப்பட்டனர்.இருவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement