dinamalar telegram
Advertisement

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கார்கே

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜூன கார்கே, கட்சி கொள்கைப்படி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை எதிர்த்து, சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூன கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, அதற்கான கடிதத்தை சோனியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.



வாசகர் கருத்து (10)

  • kulandai kannan -

    இன்றைய தேதியில் கார்கேவுக்கு இருந்ததே ஒரு பதவி தானே. அதை ஏன் ராஜினாமா செய்தார்? எல்லாமே மாய்மாலம்தான்.

  • theruvasagan -

    உள்ளதும் போச்சா. சோனமுத்தா.

  • சிந்தனை -

    காங்.க்கு சமாதி...

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    BJP யை பார்த்து ஒரு நபருக்கு ஒரு பதவின்னு காபி அடித்தீர்கள். அதே போல 75 வயது மேலானவர்கள் ஆலோசகர்களாக மட்டும் இருக்க முடியும்னு BJP யை பார்த்து காபி அடித்தால் நன்றாக இருக்கும். ஆனார்பட்ட அத்வானி அவர்களையே அவர்கள் ஆலோசகராக ஆக்கி விட்டார்கள். உங்களால் அதை செய்ய முடியலையே. 80 வயதாகி விட்டது திரு கார்கே அவர்களுக்கு. எப்படி இவர் இளம் காங்கிரஸ் காரர்களை கவர முடியும். இதற்கு திரு சிதம்பரத்தை தலைவராக்கி இருக்கலாம். அவருக்கு வயதாகி விட்டாலும் சிந்தனையில் கெட்டிக்காரர். எது செஞ்சாலும் யோசிச்சு பாதகம் வராமல் பார்த்து கொள்வதில் வல்லவர். உண்மையிலே அவரை காங்கிரஸ் தலைவராகினால் காங்கிரஸ்க்கு நல்லது.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கார்கே அவர்கள் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்தபோது என்ன சாதித்தார்? ஒருவேளை காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் என்ன சாதிப்பார்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement