dinamalar telegram
Advertisement

தினம் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவரா? - ரூ.1 கோடியை சாம்பலாக்குகிறீர்கள்!

புகைப் பழக்கம் உடல் நலத்திற்கு கடுமையான கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அது நமது நிதி நிலைமையில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை சின்ன கணக்கின் மூலம் பார்க்கலாம்.

ஏன் சிகரெட்டை விட கடினமாக உள்ளது?



சிகரெட் பிடிப்பவர்களுக்கு அதன் ஆபத்துக்கள் அனைத்தும் தெரிந்தே உள்ளன. தினமும் நிறைய சிகரெட்களை ஊதித் தள்ளுபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், மூளையில் கட்டி, ரத்த அழுத்தம் என பல பாதிப்புகள் ஏற்பட்டு மத்திய வயதில் தினசரி வாழ்க்கையே நரகமாக கழியும் என்பதை அறிந்துள்ளனர். இருந்தாலும் சிகரெட்டை உள்ளிழுக்கும் போது மூளையை சென்றடைந்து டோபமைனைச் சுரக்கச் செய்யும் நிகோடின், எதையோ சாதித்த உணர்வை வழங்குகிறது. இந்த உணர்வு மீண்டும் மீண்டும் அதனை தேடிச் செல்ல வைக்கிறது.

சிகரெட்டை விட்டால் ரூ.1 கோடி கிடைக்கும்



30 வயதில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிக்கிறீர்கள் எனில், அதன் விலை ரூ.170. மாதம் ரூ.5,100 ஆகிறது. சிகரெட் பிடிக்காத ஒரு நபர் இதே 5,100 ரூபாயை ஆண்டுக்கு 10 சதவீத கூட்டு வட்டி எதிர்பார்க்கக் கூடிய மியூட்சுவல் பண்ட் எஸ்.ஐ.பி., திட்டங்களில் போட்டு வந்தால் அடுத்த 30 ஆண்டுகள் முடிவில் அவரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் இருக்கும். அது தான் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தின் அதிசயம். முதலீடு செய்தது ரூ.18.3 லட்சம் தான். ஆனால் அது தந்த ரிட்டர்ன் ரூ.87.7 லட்சமாக இருக்கும். சிகரெட் விலை ஆண்டுக்கு ஆண்டு உயர்கிறது. அதன் படி மாதாந்திர எஸ்.ஐ.பி.,யை உயர்த்தினால் மேலும் சில லட்சங்கள் வங்கி கணக்கில் சேர்ந்திருக்கும்.

சரி சிகரெட்டை முற்றாக விடுவதற்கு கடினமாக இருக்கிறது. பாதியாக குறைத்துக்கொள்கிறேன் என்கிறீர்களா. அப்படி பார்த்தால் மாதம் ரூ.2,550 மிச்சமாகும். அதனை அப்படியே 30 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் முதலீடு செய்து வந்தால், அது 10% ரிட்டர்ன் வழங்கினால். உங்களிடம் ரூ.53 லட்சம் இருக்கும். முதலீடு செய்த தொகை ரூ.9.8 லட்சம் தான்.

சிகரெட்டை விடுவதற்கு இதனை முயற்சியுங்கள்!



அடுத்த 10 நாட்களுக்குள் ஒரு தேதியை நிர்ணயித்து அன்றிலிருந்து புகைப்பதை விடுவது என முடிவு செய்யுங்கள். இந்த 10 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக சிகரெட்டை குறைத்து மனதை தயார்ப்படுத்துங்கள்.


சிகரெட்டை விடப் போகிறேன் என குடும்பத்தினர், நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். குறிப்பாக இந்த முயற்சிக்காக உங்களை உற்சாகப்படுத்துபவர்களிடம் தெரிவியுங்கள்.


சிகரெட்டை விடும் பலரும் 3 மாதங்களில் மீண்டும் அவற்றை தொடங்கிவிடுகின்றனர். எனவே நீங்கள் எப்போது ஜாக்கிரதை உணர்வுடன் இருங்கள். சிகரெட் தேவை எழும் போது சுடு தண்ணீர் குடியுங்கள்.


புகையிலை பொருட்கள் எதுவுமே வீட்டில், அலுவலகத்தில், கார், பைக்குகளில் இருக்கக் கூடாது. காலி பாக்கெட் கூட இருக்கக் கூடாது. ஆஷ்ட்ரே, லைட்டர்ஸ் என அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். சிகரெட் பிடிக்காமல் மிச்சமாகும் பணத்தை இன்றே, இப்பொழுதே முதலீடு செய்யத் தொடங்குங்கள்.


இவை எல்லாம் எழுதிப் பார்ப்பதற்கு எளிது தான். கடைப்பிடிப்பது என்பது போருக்கு தயாராவதைப் போன்று. அதனை கடைப்பிடித்து நிறுத்திவிட்டால் உங்களைப் போன்ற சிறப்பான நபர் யாரும் இல்லை. ஆரோக்கியமான, ஆடம்பரமான எதிர்காலத்திற்கு இதனை முயற்சித்துத் தான் பாருங்களேன்.



வாசகர் கருத்து (7)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அடுத்த 30 ஆண்டுகள் முடிவில் அவரிடம் ரூ.1 கோடியே 6 லட்சம் இருக்கும். அதன்பிறகுதான் அவர்கள் ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால், தினம் தினம் புகைப்பதால் - ஆஹா என்ன ஆனந்தம், என்று நான் கூறவில்லை. புகைப்பவர்கள் கூறுகிறார்கள்.

  • அப்புசாமி -

    வந்தவர்:டாக்டர் டாக்டர் ...டாக்டர்: என்னய்யா என்ன உடம்பு?வந்தவர்:அது ஒண்ணுமில்ல டாக்டர், நான் நூறு வயசு வாழணும்.டாக்டர்: வெத்தலை பாக்கு போடுவியா?வ: இல்லை டாக்டர்.டா: ஸ்வீட், காரம் சாப்புடுவியா?வ: இல்லை டாக்டர்.டா: பீடி, சிகரெட்?வ: நோ..நோ டாக்டர்.டா: தண்ணி போடுவியா?வ: ஐயோ... ஒண்ணும் கிடையாது டாக்டர்.டா: பொம்ம்பள விஷயம்?வ: கடவுளே.. அப்பிடியெல்லாம் கிடையாது டாக்டர்?டா: அப்புறம் எதுக்குய்யா நூறு வருஷம் வாழணும்?இப்பவே போய்ச்சேரு.நீதி: எதையும் அளவுடன் அனுபவித்து ஆனந்தமுடன் வாழவும்.

  • Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ

    Our body parts that gets damaged due to smoking is worth more than 1 crore. Lungs, Mouth, Neck to Teeth treatment long term costs easily 1 crore.

  • Kundalakesi - Coimbatore,இந்தியா

    Cigarate kooda tea mouth refresher endru oru 30 rs extra spend panrom. Liquor means 300 gaali.

  • ThiaguK - Madurai,இந்தியா

    ஆனால் எல்லா காபி டி கடைகளி ல் இந்த குடிமகன்களின் தொல்லை தாங்க முடியல ....நன்கு ரசித்து டி காபி அருந்த முடியல ...எந்த அதிகாரிகளும் அரசும் இதை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கிறது ,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement