dinamalar telegram
Advertisement

அரசு வழங்கும் விருதுகளில் தலைவர் படம் தேவையா?

சென்னை: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் வழங்கப்படும். இது சில ஆண்டுகளாக தடைபட்ட நிலையில், கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுகளுக்கான விருதுகள், செப்.,4ல் வழங்கப்பட்டன.

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு, வெள்ளக்கோவில் சுவாமிநாதன், மேயர் பிரியா ஆகியோர் வழங்கினர். இந்த விழாவில், ஏராளமான திரைக்கலைஞர்கள் நேரில் விருதுகளை பெற்று கொண்டனர். அதனுடன் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழக அரசு சின்னத்துடன் மறைந்த முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.
அதேநேரத்தில், நேற்று டில்லியில் 68 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. சிறந்த நடிகர், நடிகையர், இயக்குநர் என பலதரப்பட்ட கலைஞர்களுக்கு தேசிய விருதினை ஜனாதிபதி வழங்கினார். ஜனாதிபதி விருதுடன் வழங்கிய சான்றிதழில், இந்திய அரசின் சின்னம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. எந்த தலைவர்களும் இடம்பெறவில்லை.
இதனை கவனித்த நெட்டிசன்கள், அரசின் செலவில் நடந்த விழாவில், தமிழக அரசின் சான்றிதழில் தலைவர்கள் படம் இடம்பெற்றதையும், மத்திய அரசு சான்றிதழில் அரசின் சின்னம் மட்டும் இடம்பெற்றதையும் சுட்டிக்காட்டியதுடன் , கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.



வாசகர் கருத்து (33)

  • Chinnaa - Theni ,இந்தியா

    அரசு கொடுப்பது குடியரசு தலைவர்,அதுபோல் ஆளுநர் கொடுத்தால் அதில் மாநில முதலமைச்சர் படம் இருக்காது.குடியரசு தலைவர் கொடுப்பது அரசியலமைப்பு,முதலமைச்சர் கொடுப்பது அரசாங்க அமைப்பு.முதலில் அதை புரிந்து கொண்டு இதுபோல் செய்தியை பரப்பவும்.

  • Chinnaa - Theni ,இந்தியா

    ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளவும்,அரசு,அரசாங்கம்? இங்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஸ்டாலின்,அப்படி என்றால் மத்திய அரசு சார்பில் ஏன் பிரதமர் மோடி இல்லை? செய்தி பரப்பாளர்கள்(ஊடகங்கள்),கருத்து தெரிவிப்பவர்கள் கவனத்திற்கு,ஒன்றிய அரசு கொடுப்பது அரசியல் அமைப்பு,தமிழ்நாடு அரசு கொடுப்பது,அரசாங்க அமைப்பு.தமிழ்நாட்டில் அரசியலமைப்பில் கொடுத்தால் அதை தமிழ்நாடு அரசு முத்திரையுடன் ஆளுநர்(கவர்னர்)கொடுப்பர்.

  • ராஜா -

    அந்த விருதுக்கு மரியாதை அவ்வளவு தான்.

  • wasterpaperflower -

    you flower didnt noticed this. from netseian you came to know right

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    த்ருஷ்டி பொம்மைன்னு நினைச்சுக்க ேவண்டியதுதான

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement