dinamalar telegram
Advertisement

தேவர் தங்க கவசத்தை என்னிடம் ஒப்படைக்கணும் உரிமை கோரினார் முன்னாள் அமைச்சர் சீனிவாசன்

மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, 'அ.தி.மு.க., பொருளாளர் என்ற முறையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என மதுரையில் வங்கி அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உரிமை கோரினார்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் உள்ளது. இங்குள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் 13 கிலோ தங்க கவசத்தை 2014ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இந்த கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றின் லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது. அக்., 30 தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க., பொருளாளர் என்ற முறையில் வங்கிக்கு பன்னீர்செல்வம் சென்று கையெழுத்திட்டு தங்ககவசத்தை பெறுவது வழக்கம்.இந்நிலையில், ஒற்றை தலைமை பிரச்னையில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.


புதிய பொருளாளராக, முன்னாள் வனத்துறை அமைச்சர் சீனிவாசனை இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி நியமித்துள்ளார். கட்சியின் வரவு - செலவு, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, அ.தி.மு.க., கணக்குகளை பராமரிக்கும் வங்கிக்கு பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்; வங்கியும் ஏற்றுக்கொண்டது.


அதை அடிப்படையாக வைத்து, 'அ.தி.மு.க., பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும்' என மதுரை அண்ணாநகர் வங்கி அதிகாரிகளிடம் சீனிவாசன் நேற்று உரிமை கோரினார்.முன்னாள் அமைச்சர்கள் ராஜு, உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஆலோசித்து முடிவு செய்யப்படும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement