டாஸ்மாக் மதுக்கடை பார் உரிமம்டெண்டர் அறிவிப்பு; ஐகோர்ட் ரத்து
சென்னை: மதுபான 'பார்' உரிமம் வழங்குவதற்காக 'டாஸ்மாக்' நிர்வாகம் பிறப்பித்த 'டெண்டர்' அறிவிப்பை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மதுக் கடை அருகில் பார் நடத்த உரிமம் வழங்குவதற்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2022 ஆகஸ்ட் 2ம் தேதி டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:தற்போது நாங்கள் பார் நடத்தும் இடங்களை புதிதாக டெண்டர் எடுத்தவர்களுக்கு வழங்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் வற்புறுத்துகிறது.எங்களுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் இடையில் இடத்துக்கான ஒப்பந்தம் எதுவும் இல்லை. இடத்தின் உரிமையாளருடன், நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்கும்படி, டாஸ்மாக் நிர்வாகம் எங்களை நிர்ப்பந்திக்க முடியாது.

எனவே, டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும். டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டது.மனுக்களை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். 'டெண்டர் நடைமுறையை தொடரலாம்; ஆனால் யாருக்கும் டெண்டர் ஆணை வழங்கக் கூடாது' என, நீதிபதி இடைக்கால உத்தரவிட்டிருந்தார்.பி், இவ்வழக்கின் விசாரணை முடிந்து, நீதிபதி அனிதா சுமந்த் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
பார் டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.'நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரரிடம் இருந்து பார் நடத்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்' எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!