dinamalar telegram
Advertisement

மதுரையிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்

மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் சில ரயில்களின் புறப்படும் நேரம் இன்று (அக். 1) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி-- துாத்துக்குடி சிறப்பு ரயில் (06668) திருநெல்வேலியில் இருந்து காலை 7:35 மணிக்கு பதில் காலை 7:30 மணிக்கும், துாத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06671) துாத்துக்குடியில் இருந்து காலை 8:30 மணிக்கு பதில் காலை 8:25 மணிக்கும், மற்றொரு துாத்துக்குடி - மணியாச்சி சிறப்பு ரயில் (06847) துாத்துக்குடியில் இருந்து இரவு 10:45 மணிக்கு பதில் இரவு 10:10 மணிக்கும் புறப்படும்.

ராமேஸ்வரம் -- புவனேஸ்வர் விரைவு ரயில் (20895) ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8:50 மணிக்கு பதில் காலை 8:40 மணிக்கும், ராமேஸ்வரம் -- திருப்பதி விரைவு ரயில் (16780) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கு பதில் மாலை 4:20 மணிக்கும், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம்- - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16852) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5:25 மணிக்கு பதில் மாலை 5:20 மணிக்கும் புறப்படும்.


ராமேஸ்வரம் -- மதுரை சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 6:05 மணிக்கு பதிலாக மாலை 6:00 மணிக்கும், திருச்சி வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் -- கோயம்புத்துார் விரைவு ரயில் (16617) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 7:25 மணிக்கு பதிலாக இரவு 7:10 மணிக்கும்,ராமேஸ்வரம் -- சென்னை விரைவு ரயில் (22662) ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8:25 மணிக்கு பதிலாக இரவு 8:20 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement