dinamalar telegram
Advertisement

அக்., 6 முதல் 9 வரை புற்றுநோய் அறுவைசிகிச்சை கருத்தரங்கு



மதுரை, -புற்றுநோய் அறுவை சிகிச்சை டாக்டர்கள் சங்கம் சார்பில் தேசிய அளவிலான நாட்கான்' கருத்தரங்கு முதன்முறையாக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பில் அக்., 6 முதல் 9 வரை ஓட்டல் மேரியாட்டில் நடத்தப்படுகிறது.நாட்கான்' ஒருங்கிணைப்பு செயலாளர் டாக்டர் ரமேஷ் கூறியதாவது: முதல்நாள் நடக்கும் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் தலை முதல் கால் வரையான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை இருக்கும்.அடுத்த 3 நாட்கள் அறிக்கை சமர்ப்பித்தல், போஸ்டர் உருவாக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நிபுணர்களின் அனுபவங்களை சிகிச்சை முறை வாயிலாக பகிர்ந்து கொள்ளுதல் என்ற தலைப்பில் கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. சர்வதேச நிபுணர்கள் 10 பேர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.முதுநிலை மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு இக்கருத்தரங்கு எம்.சிஎச். படிப்பு குறித்த புதிய வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும். மேலும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், இளம் புற்றுநோய் நிபுணர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். ஒருநாள் கருத்தரங்கில் பங்கேற்கலாம் என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement