dinamalar telegram
Advertisement

ரூ. 500 கோடியில் பாதாள சாக்கடை மண் ஆய்வு பணி துவக்கம்



திருப்பரங்குன்றம்--திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம் உட்பட பாதாள சாக்கடை இல்லாத வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக மண் ஆய்வு பணி நேற்று துவங்கியது.இப்பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால் குடியிருப்புகள், வணிக வளாக கழிவுநீர் தென்கால், பானாங்குளம், சேமட்டான் குளம், நிலையூர் பெரிய கண்மாய், நிலையூர் கால்வாய்களில் கலக்கிறது. இதனால் வைகை பாசன நீர் மாசடைவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கின்றன. விளைச்சலும் குறைந்து வருகிறது. இதை தவிர்க்க பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.தற்போது பாதாள சாக்கடை அமைக்க திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன் தலைமையில் மண் பரிசோதனை பணி நேற்று தொடங்கியது.மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், ''மேற்கு மண்டலத்தின் 11 வார்டுகளில் ஒரு வார்டில் 20 இடங்களில் பரிசோதனைக்காக மண் எடுக்கப்படுகிறது. பணிகள் முடிவடைந்த பின்பு மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும். அதைதொடர்ந்து டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும்'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement