dinamalar telegram
Advertisement

நேர்காணலில் பங்கேற்காத 1713 ஓய்வூதியர்கள்



மதுரை-மதுரை மாவட்டத்தில் 1713 ஓய்வூதியர்கள் இறுதி நாளான செப்.,30 வரை நேர்காணலில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர்.மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களில் 40 ஆயிரத்து 359 பேர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இது சென்னைக்கு அடுத்து அதிகமான எண்ணிக்கை. ஆண்டுதோறும் கருவூல அலுவலகத்தில் நேர்காணலில் பங்கேற்று, வாழ்நாள் சான்றை சமர்ப்பித்து ஓய்வூதியத்தை புதுப்பிக்க வேண்டும். இந்தாண்டு நேரில் சென்றும், தபால், இ சேவை, பிரத்யேக செயலி மூலம் என பலவழிகளிலும் புதுப்பித்தனர்.மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 38 ஆயிரத்து 646 பேர் வாழ்நாள் சான்றை சமர்ப்பித்துள்ளனர். 1713 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை கருவூல அதிகாரிகள் போன், தபால் மூலம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement