dinamalar telegram
Advertisement

கழிவுநீர் அருவியாய் கொட்டுதே...துர்நாற்றம் மக்களை கொல்லுதே

ADVERTISEMENT


மதுரை- - -மதுரை புதுார் பஸ் ஸ்டாண்ட் பின்புறம்மாரியம்மன் கோயில் தெருவின் குறுக்கே செல்லும் கால்வாயில் அருவி கொட்டுவது போல, சாக்கடை கழிவுநீர் கொட்டுது. துர்நாற்றமோ பயணிகளையும், பொதுமக்களையும் தினமும் பாடாய் படுத்துகிறது.மழைநீர், பாசன நீர் வழிந்து போகட்டும் என மதுரையில் ஆங்காங்கே கால்வாய்களை கட்டி வைத்துள்ளனர். அந்தக் கால்வாய்களில் எல்லாம் பாசன நீருக்குப் பதில், பாதாள சாக்கடையின் கழிவுநீர்தான் பெருக்கெடுத்து ஓடுகிறது.இப்படி எந்த கால்வாயாக இருந்தாலும் இந்த கால்வாய் கூட போட்டி போட முடியாது' என்று பஞ்ச் டயலாக் பேசும் அளவுக்கு புதுார் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் கால்வாயில் வெள்ளம் போல் கொட்டுகிறது கழிவுநீர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது:மாரியம்மன் கோயில் தெரு, சங்கர் நகர், முத்துராமலிங்கபுரம் தெருக்கள் சந்திக்கும் பகுதியில் பெரிய கால்வாய் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதி பாதாள சாக்கடைகளில் தேங்கும் கழிநீரை கால்வாயில் தான் திறந்து விடுகின்றனர். கால்வாயின் ஒரு பக்கம் புதர் மண்டிக் கிடப்பதால்கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் குடலை புரட்டுவதால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.எதிரிகளுக்கு கூட இந்த நிலை வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு துன்பத்தை அனுபவிக்கிறோம். பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை. கழிவுநீர் குடிநீரில் கலப்பதால் அதையும் குடிக்க முடியாமல் தவிக்கிறோம், என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement