dinamalar telegram
Advertisement

மக்களை அல்லல்படுத்தும் ரோடு ஆக்கிரமிப்பை அகற்றலாமே

ADVERTISEMENT


திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் ரோட்டோரம் பயணிக்க முடியாமல் மக்கள்,வாகனஓட்டிகள் நெரிசலால் தினமும் சிரமப்படுகின்றனர்.


மாவட்டத்தில் உள்ள நகர்களின் முக்கிய ரோடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கிறது. நடைபாதை கூட ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்க பாதசாரிகள் ரோடுகளில் நடக்கும் அவல நிலை தொடர்கிறது. பெரிய நிறுவனங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல . ரோட்டோர சாக்கடைகளை கூட விட்டு வைப்பதில்லை . இதோடு டூவீலர்கள்,கார்களை நிறுத்தியும் ரோடுகளை ஆக்கிரமிக்கின்றனர் .இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.இப்பிரச்னையால் நகரில் பல ரோடுகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் வேறு வழியாக சுற்றி செல்கின்றனர்.சில நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் கூடசெல்ல முடியாத நிலை உள்ளது.


நடவடிக்கை எடுக்கவேண்டிய உள்ளாட்சி , வருவாய்,நெடுஞ்சாலை, போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இப்பிரச்னைக்குமாவட்ட நிர்வாகம்தான் தனிக்கவனம் செலுத்தவேண்டும்...........நடவடிக்கை எடுங்கதொடரும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை அவசியமாகிறது.போலீசாரும் டூவீலர்களை ரோட்டில் பார்க்கிங்செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆக்கிரமிப்புகளால் மக்கள் படும் துயரத்தை போக்க துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.சந்திரசேகர்,கடை உரிமையாளர்,திண்டுக்கல்................



வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    ஆக்கிரமிப்பாளர்கள் கூட மக்கள் தான். ஒண்ணு அவிங்க போடும் கடைகளில் எதுவும் வாங்காமல் இருக்கணும். இல்லே, ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது போராட வரும் எதிர்க்கட்சி ஆளுங்களை தூக்கி ஜெயிலில் போடணும். கடைபோடுவதால்தான் கும்பல் வருது. கும்பல் வருவதால் தான் கடை போடுறாங்க. ஒண்ணும் பண்ண முடியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement