dinamalar telegram
Advertisement

கோபி நகராட்சி சாதாரண கூட்டம்

கோபி : கோபி நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் நாகராஜ், கமிஷனர் பிரேம் ஆனந்த் தலைமை வகித்தனர். கூட்டத்தில், 30 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

மின்கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிப்பதாக கூறி, கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேர் வெளிநடப்பு செய்தனர். அலுவலகத்துக்கு வெளியே கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயத்தில், 37 தீர்மானங்களை நிறைவேற்றியதாக கூறி கூட்டம் நிறைவு பெற்றது. அதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டரங்கில் குவிந்தனர். கமிஷனர் பிரேம் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement