dinamalar telegram
Advertisement

தீபாவளி பண்டிகைக்கு புதுச்சேரி போத்தீசில் மெகா பம்பர் பரிசு கூப்பன் போட்டி துவக்கம்

ADVERTISEMENT


புதுச்சேரி : புதுச்சேரி போத்தீஸ் நிறுவனத்தில் தீபாவளி சரவெடி மெகா பம்பர் பரிசு என்ற பெயரில் பரிசு கூப்பன் போட்டி நேற்று துவங்கியது.போத்தீஸ் ஜவுளி நிறுவனம், தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. இங்கு துணிகள் மட்டுமின்றி அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் விற்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தில் தீபாவளி சரவெடி மெகா பம்பர் பரிசு என்ற பரிசு கூப்பன் போட்டி துவக்க விழா நேற்று நடந்தது.புதுச்சேரி கிளை பொது மேலாளர் அருண்மொழி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கோல்டு பிரியம் ரீபைன்ட் சன்பிளவர் ஆயில் நிறுவன உரிமையாளர்கள் சேத்தன் கோத்தாரி, விமல் கோத்தாரி கலந்து கொண்டனர்.போத்தீஸ் குரூப் மேலாண் இயக்குனர் ரமேஷ், மெகா பம்பர் பரிசு கூப்பன் போட்டியை துவக்கி வைத்து, வாடிக்கையாளர்களுக்கு போட்டி கூப்பனை வழங்கினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், பல வியாபார யுத்திகளுக்கு புதுச்சேரி போத்தீஸ் முன்னோடி. புதுச்சேரியை பார்த்து தான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். நாங்கள் செய்யாத பல யுத்திகளை வெற்றிக்கரமாக செய்துள்ளனர். அந்த யுத்திகள் மற்ற 17 கிளைகளிலும் அறிமுகப்படுத்தும் அளவிற்கு உள்ளது.


ஆண்டு விழா பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பித்ததும் புதுச்சேரி கிளை தான். இதேபோல் பரிசு கூப்பன் போட்டியும் புதுச்சேரி கிளையில் பிரமாதமாக நடத்தப்படுகிறது. அதுவும் ரூ.60 லட்சம் அளவிற்கு நடத்தப்படுகிறது. இது பெரிய அளவில் வெற்றி பெறும். இதில் கோல்டு பிரியம் ரீபைன்ட் சன்பிளவர் ஆயில் நிறுவனம் கைகோர்த்தது மகிழ்ச்சி என்றார்.போத்தீஸ் மெகா பம்பர் பரிசு போட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள எக்கசக்க பரிசுகள் காத்திருக்கிறது. முதல் பரிசாக ேஹாண்டா அமேஸ் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. அடுத்து 15 பேருக்கு ஸ்கூட்டி, டி.வி., வாஷிங்மெஷின்,பிரிட்ஜ் தலா 50 வீதம் 150 பேருக்கும், கிரைண்டர், மிக்ஸி தலா 100 பேர் வீதம் 200 பேருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், ஸ்மார்ட் வாட்ச், புட் புராசசர், ட்ராலி என பல பரிசுகள் காத்திருக்கின்றன.பரிசு கூப்பன் போட்டி துவங்கியதும் முதல் நாளான நேற்றே வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் கூப்பனை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். போத்தீஸ் நிறுவனத்தில் ஜவுளிக்கடை, லைப் ஸ்டைல், சூப்பர் மார்க்கெட் பிரிவுகளில் பொருட்கள் ஆடைகள் வாங்குபவர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பனை பூர்த்தி செய்து, அங்குள்ள பரிசு பெட்டியில் சேர்த்தால் போதும். பரிசுகளை அள்ளிகிட்டு போகலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement