dinamalar telegram
Advertisement

ஏலச்சீட்டு நடத்திய பெண் குடும்பத்துடன் தலைமறைவு

ADVERTISEMENT


திருபுவனை : திருபுவனை அருகே ஏலச்சீட்டு நடத்திய பெண் குடும்பத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.புதுச்சேரி, திருபுவனைபாளையம் பெருமாள் நகரை சேர்ந்தவர் விஜயகுமார்,55; டீகடை ஊழியர். இவரது மனைவி கனகராணி, 46; ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் ஏலச் சீட்டு கட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாக சீட்டு ஏலம் எடுத்தவர்களுக்கு கனகராணி பணத்தை தராமல் காலம் கடத்தி வந்தார். இந்நிலையல், கனகராணிக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனர்.இந்நிலையில் கனகராணி, அவரது மூத்த மகள் பாக்கியலட்சுமி, மருமகன் தாமோதரன், இளையமகள் கார்த்திகா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகினர். இதனை அறிந்த, சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை கனகராணியை அவரது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. அதனையொட்டி, சீட்டு கட்டியவர்கள் கனகராணி வீட்டிற்கு வேறு பூட்டை போட்டு பூட்டினர். மேலும், இதுகுறித்து திருபுவனை போலீசில் முறையிட்டனர். அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகினறனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement