dinamalar telegram
Advertisement

ஆம்புலன்ஸ் வாங்க ரூ.34 லட்சம் நிதி

ஈரோடு : கோவை எம்.டி.சி.ஆர்.சி., பயிற்சி மையத்துக்கு, தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க, சக்தி மசாலா நிறுவனம் சார்பில், 34 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

கோவையில் மாலிக்குலர் டையக்னோஸ்டிக்ஸ், கவுன்சிலிங் கேர் மற்றும் ஆராய்ச்சி மையம் (எம்.டி.சி.ஆர்.சி.,) செயல்படுகிறது. இங்கு தசை சிதைவு (மஸ்குலர் டிஸ்டிரோபி) நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, மருத்துவம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த பயிற்சி மையத்துக்கு குழந்தைகள் சென்று வரும் வகையில், தானியங்கி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்க, சக்தி மசாலா நிறுவனம் சார்பில், 34 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை, நிறுவனர்கள் பி.சி.துரைசாமி, சாந்திதுரை ஆகியோர், எம்.டி.சி.ஆர்.சி., மேலாண்மை இயக்குனர் லட்சுமியிடம் வழங்கினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement