dinamalar telegram
Advertisement

மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு ரூ.32 லட்சம் செலவில் வனச்சூழலில் தங்குமிடம்

ADVERTISEMENT


புதுச்சேரி ; மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ரூ.32.40 லட்சம் செலவில் வனச் சூழலில் தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது.மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, கடந்த 1997 ம் ஆண்டு முதல் கோவில் விசேஷங்கள் மற்றும் திருவிழாக்களில் பங்கேற்று பக்தர்களை ஆசிர்வதித்து வருகிறது.இந்த யானை தற்போது புதுச்சேரி, காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவில் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறை அறிவுறுத்தலின்படி தற்போதுள்ள சிமென்ட் கட்டடத்திற்கு பதிலாக புல் தரையுடன் கூடிய விசாலமான இடத்தில் யானையை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, புதுச்சேரி மிஷன் வீதி காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் ஒன்று முத்தியால்பேட்டை, மஞ்சினி நகர்,பஜனை மடத்து வீதியில் உள்ளது.அந்த இடம், யானை லட்சுமி வசிப்பதற்கு ஏற்ப மரம், செடிகொடிகள், புல் தரையுடன் கூடிய வனம் சார்ந்த பகுதிபோல் உள்ளது.


இந்த இடத்தில், மணக்குள விநாயகர் கோவில் அறங்காவல் குழுவினர் கோரிக்கையை ஏற்று காளத்தீஸ்வரர் தேவஸ்தானம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.இந்த இடத்தில் ரூ.32.40 லட்சம் மதிப்பில் யானை லட்சுமிக்கு வசிப்பிடம் , பாகன் தங்குமிடம், மருத்துவ அறை மற்றும் யானை குளியல் அறை கட்டப்பட உள்ளது.இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., மணக்குள விநாயகர் கோவில், காளத்தீஸ்வரர் தேவஸ்தானம் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement