dinamalar telegram
Advertisement

யூ.டி.சி., பணிகளுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்



புதுச்சேரி ; யூ.டி.சி.,பணியிடங்களுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 116 யூ.டி.சி.,பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று 1ம் தேதி காலை 10 மணி முதல் வரும் 31ம் தேதிவரை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இட ஒதுக்கீடு



மொத்தமுள்ள 116 பணியிடங்களில், பொது-46, எம்.பி.சி.,-21, எஸ்.சி.,-19, ஓ.பி.சி.,-13, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்-11, மீனவர்-2, முஸ்லிம்-2, பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர்-1, எஸ்.டி.,-1. உள் ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்-6, மாற்றுதிறனாளி-5, முன்னாள் ராணுவ வீரர் வாரிசு-12 இடங்கள் கொடுக்கப்பட உள்ளது.

போட்டி தேர்வு எப்படி



யூ.டி.சி.,பணியிடங்கள் போட்டி தேர்வு அடிப்படையில் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளது. 100 ஒரு மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும். பொது கணிதம், அறிவியல், ஆங்கிலம், புவியியல், இந்திய பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு சட்டம், பொது அறிவு, நாட்டு நடப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

மைனஸ் மதிப்பெண்



ஒவ்வொரு தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வை, தமிழ் ஆங்கிலம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement