எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி ; போனில் மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஆர்ப்பாட்டம் நடத்தினார்.காலாப்பட்டு எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரத்தை, உளவாய்க்கால் சந்திரசேகர் போனில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று காலை தனது ஆதரவாளர்களுடன் கருவடிக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அவரை லாஸ்பேட்டை போலீசார் சமாதானப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து லாஸ்பேட்டை போலீசில், மிரட்டல் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!