3,753 பேருக்கு தடுப்பூசி
புதுச்சேரி : மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,152 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 43 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,74, 602 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1,72,331 பேர் குணமடைந்துள்ளனர்.இவர்களில் தற்போது 4 பேர் மருத்துவமனைகளிலும், 298 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். 302 சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாம்களில், 3,753 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 9,93,213 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!