dinamalar telegram
Advertisement

மத்திய அரசின் துறைமுக மசோதாவால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது சொல்கிறார் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்

தூத்துக்குடி,:''மத்திய அரசு கொண்டு வந்துள்ள துறைமுக மசோதாவால் மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படாது ,''என மத்திய கப்பல், நீர்வழி போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தெரிவித்தார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த அவர் மேலும் கூறியதாவது:நாட்டில் உள்ள துறைமுகங்களில் சாகர்மாலா திட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளால் 850 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த துறைமுகங்களின் கொள்ளளவு 1600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

துறைமுகங்களை நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தேர்வான 100 திட்டப்பணிகளில் 43 பணிகள் முடிவடைந்துள்ளன. தமிழகத்தில் கடலோர மேம்பாட்டுக்கு மட்டும் 12 ஆயிரத்து 368 கோடி ரூபாய் செலவில் 111 செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் கடல் வழி மற்றும் நீர்வழிப் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.திட்டங்களை விரைந்து முடிக்க கதி சக்தி திட்டத்தின் மூலம் பல துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன ,என்றார். பேட்டியின் போது தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன், துணைத் தலைவர் பிமல் உடன் இருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement