dinamalar telegram
Advertisement

வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி: கிராம சபாவில் சான்று வழங்க உத்தரவு

கோவை:'ஜல் ஜீவன் திட்டத்தில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சியில், 'வீடுதோறும் குடிநீர் வழங்கிய ஊராட்சி' என கிராம சபாவில் தீர்மானம் நிறைவேற்றி, ஊராட்சி தலைவரால் சான்றிதழ் வழங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அக்., 2 கிராம சபாகூட்டம் நடத்த வேண்டும்.இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கிராம சபாவில் உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்யவேண்டும். மதசார்புள்ள எந்த இடத்திலும் கூட்டம் நடத்தக்கூடாது; கூட்டம் நடக்கும் இடத்தை முன்னரே மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.நடப்பாண்டு பணிகள், திட்டத்தின் பெயர், மதிப்பீடு, தற்போதைய நிலை குறித்து விவாதிக்க வேண்டும். கடந்தாண்டுக்கான தணிக்கை அறிக்கையை கிராம சபை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும். வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொது கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.டெங்கு பரவாமல் தடுக்க, அனைத்து குக்கிராமங்களிலும் துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்.சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். குளம், குட்டைகளின்கரைகளை கண்காணிக்க வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு விபரத்தை, கிராம சபாவுக்கு தெரிவிக்க வேண்டும். விடுபட்ட குடிசைகள் இருந்தால், அதை சேர்த்து, இறுதி அறிக்கை உறுதி செய்ய வேண்டும்.பிளாஸ்டிக் பை பயன்படுத்தாத கிராமங்களை உருவாக்க வேண்டும். பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்ய வேண்டும். பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதோடு, திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.'ஜல் ஜீவன்' திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சியில், 'வீடு தோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி' என தீர்மானம் நிறைவேற்றி, ஊராட்சி தலைவரால் சான்றிதழ் வழங்கவேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement