dinamalar telegram
Advertisement

தீபாவளி ஆவின் ஸ்வீட்: ரூ ஒரு கோடிக்கு விற்க இலக்கு:

தேனி --தேனி மாவட்ட ஆவின் சார்பில் தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தேவைக்காக 5 டன் மைசூர்பா, 4 டன் பால்கோவா உட்பட 15 வகையான இனிப்பு வகைகள், திருவண்ணாமலை மிக்சர், முந்திரி பர்பி உள்ளிட்டவைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆவின் சார்பில், பால் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உற்பத்தி பொருட்கள் 22 நேரடி விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2019 -- 2020ல் தேனி மாவட்ட ஆவின் மூலம் தீபாவளி விற்பனையாக ரூ.28 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டன. கடந்தாண்டு ரூ.55 லட்சம் விற்பனை ஆனது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகைக்காக ரூ.1 கோடி மதிப்பில் பால்பொருட்கள், இனிப்புகள், காரம், மதிப்புக் கூட்டப்பட்டப் ஆவின் பால், தயிர், நெய், வெண்ணெய் விற்பனை செய்யப்பட உள்ளன.

தேனியில் தயாரிப்பு



ஆவின் மூலம் சேகரிக்கப்படும் பாலில் தேனி குளிரூட்டும் மையத்தில் 5 டன் மைசூர்பா தயாரித்து விற்பனைக்கு தயாராகி வருகிறது. இதுதவிர 4 டன் பால்கோவா, திருவண்ணாமலையில் இருந்து 2 டன் மிக்சர் விற்பனைக்கு வருகிறது. பொது மக்கள் தேவைக்கு ஆவின் விற்பனை மேலாளர்கள் தலைமையில் சிறப்பு விற்பனை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், மின்வாரிய அலுவலகங்களில் விற்பனையை துவக்கி உள்ளனர்.பொது மேலாளர் பாலபூபதி கூறுகையில், 'ஆவின் நிர்வாகம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதிப்புக்கூட்டப்பட்ட இனிப்புகளை மக்களின் தேவை அறிந்து அறிமுகம் செய்துள்ளது. ரூ1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement