dinamalar telegram
Advertisement

ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாம்: உயர்நீதிமன்றம்

ADVERTISEMENT
மதுரை: ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு வனபகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல ரூ.20 வசூலிக்கப்படுவதற்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு: * வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே.

*ரூ.20 இருந்தால் நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் உணவருந்திவிடலாம்

* வனப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பொறுப்புகளையும் கடைமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

* வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர், வனத்துறை போலீசார் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.



வாசகர் கருத்து (8)

  • R.krishnamurthy - மினிசோட்டா,யூ.எஸ்.ஏ

    மதச்சார்பற்றவர்களாக உள்ளதாகவும் எம்மதமும் சம்மதம் என மக்களிடம் காட்டிக்கொண்ட தி.மு.க, ம.தி.முக.,தி.க.,கம்யூனிஸ்ட், வி.ச.க. மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு இந்துமதத்தில் உள்ள பெண்களை மட்டுமே இழிவுபடுத்தி பேசிவிட்டு பெரியாரை மேற்கோள்காட்டி நியாயப்படுத்துவது அநியாயம் என்பதோடு 90 விழுக்காடு பெண்ணினத்தை அதுவும் அவர்களுக்கு வாக்களித்துள்ளள. தி.மு.க.குடும்ப பெண்களுக்கும் இது மனதை புண்படுத்தியுள்ளதாகாதா. இதைமற்ற மதத்தினரும் எப்படி சகித்துக்கொண்டு என்றனர். இதை ஆட்சிக்கு வருவதிற்கு முன்பாக பகிரங்கமாக சொல்லி வாக்கு கேட்டிருந்தால் வாக்குறுதி அளித்திருந்தால் இவர்கள் கூறி வரும் அறிவு பூர்வமான ஞாணோதயத்தினை முஸ்லிம் நண்பர்களும் கிறித்தவ தோழர்களும் இதனை வழிபாட்டிலும் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.வாழ்க ஜனநாயகம்.வாழ்க எம் மதமும் சம்மதம்.சம மதம்.நன்றி

  • madhavan rajan - trichy,இந்தியா

    அப்படி குறைந்த விலையில் உணவு அளித்தால் தற்போதைய ஆளும் கட்சியின் கமிஷன் கிடைக்காது என்பதால் அந்த உணவகத்தையே பல இடங்களில் நடத்தாமல் மூடுவிழா நடத்தி விட்டது தற்போதைய அரசு. அது நீதிமானுக்கு இன்னும் தெரியாது போல.

  • Nagarajan S - Chennai,இந்தியா

    நீதிபதிகளுக்கு தெரிந்தது கூட ஆட்சியாளர்களுக்கு தெரியாமல், வேண்டுமென்றே அம்மா உணவகங்களை தொடர்ந்து மூடிக்கொண்டிருக்கிறார்களே

  • vbs manian - hyderabad,இந்தியா

    சொந்த அனுபவமோ.

  • சீனி - Bangalore,இந்தியா

    வனப்பகுதிக்கு மிகவும் உள்ளே கோவில் இருந்தால், மக்கள் குப்பைகளை போட்டால் வனப்பகுதி அசுத்தமாக வாய்ப்புள்ளது, அது புராதன கோவிலாக இல்லையெனில், வன எல்லைக்கு அருகில் மாற்றிவிட்டால், மக்களுக்கும் எளிது, வனத்துறைக்கும் எளிது. பல ஏழை எளியவர்களுக்கு விடிவெள்ளியாக உள்ள அம்மா உணவகம் தேவை என்பதையும் எடுத்துரைத்த நீதிபதிக்கு பாராட்டுக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement