dinamalar telegram
Advertisement

பஸ்சில் ஓசி வேண்டாம்: டிக்கெட் கேட்டு சண்டை போட்ட மானஸ்தி

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கோவை:'நான் 'ஓசி'யில் பயணிக்க மாட்டேன். காசு வாங்கிட்டு டிக்கெட் கொடு' என்று, நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த மூதாட்டியின் செயல், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
கோவை காந்திபுரத்தில் இருந்து, கண்ணம்மநாயக்கனுார் செல்லும் அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, குரும்பப்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள், 70, பஸ்சில் ஏறினார்.நடத்துனர் வினித், துளசியம்மாளிடம் பயணச்சீட்டு கொடுக்க வந்த போது தான் துவங்கியது இந்த உரையாடல்.
நடத்துனர்: எங்கம்மா போகணும்?
துளசியம்மாள்: பாலத்துறை.
நடத்துனர்: இந்தாம்மா டிக்கெட்.
துளசியம்மாள்: காசு வாங்கிக்கோ.
நடத்துனர்: காசெல்லாம் இல்லம்மா... 'ப்ரீ' தான்.
துளசியம்மாள்: காசு வாங்கலேன்னா, டிக்கெட் வேண்டாம். நான் 'ஓசி'யில வர மாட்டேன்.
நடத்துனர்: காசு வாங்க மாட்டேன் நானு.
துளசியம்மாள்: தமிழ்நாடே 'ஓசி'யில போகுது... நான் வர மாட்டேன்.
நடத்துனர்: அட... ஏம்மா தொந்தரவு பண்றீங்க..
துளசியம்மாள்: எனக்கு, 'ப்ரீ' வேண்டாம்.
துளசியம்மாளின் பிடிவாதத்தால், நடத்துனர் பயணச்சீட்டுக்கு உரிய தொகையை பெற்று, மீதி சில்லரை கொடுத்தார்.
உரையாடலுக்கு இடையே, பயணியர் பலர் துளசியம்மாளிடம் டிக்கெட் 'ப்ரீ' தான் என்று சொன்ன போதும், அவர் ஓசி பயணம் செய்ய விருப்பம் தெரிவிக்காமல், பயணச்சீட்டு வாங்கியது தான் ஹைலைட். அமைச்சர் பொன்முடி சொன்ன 'ஓசி' என்ற அந்த வார்த்தை தான் துளசியம்மாளை உசுப்பி விட்டுள்ளது.
சமீபத்தில், ஒரு அரங்கில் அமர்ந்திருந்த பெண்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'நீங்கெல்லாம் இப்போ பஸ்ல எப்படி போறீங்க... 'ஓசி'யில...' என்று ஏளனமாக பேசியது தான், பணம் கொடுத்து பயணச்சீட்டு பெறாமல் இனி பஸ்சில் பயணிக்கக் கூடாது என்ற துளசியம்மாளின் முடிவுக்கு காரணம்.பஸ்சில் இருந்து இதை வீடியோ எடுத்த ஒருவர், சமூகவலைதளத்தில் பதிவிட்டது தற்போது வேகமாக பரவி வருகிறது. துளசியம்மாளுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பல பெண்களின் ஆதங்கமும் இது தான். 'நாங்களா கேட்டோம்; அரசாங்கம் தான் இலவசப் பயணம் கொடுத்தது. இதை அமைச்சர் எப்படி 'ஓசி' பயணம் என்று பேசுகிறார்; அதை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கோபமாக கூறுகின்றனர்.துளசியம்மாளின் வழியை, இன்னும் எத்தனை பெண்கள் பின்பற்றப் போகின்றனர் என்பது போக போக தெரியும்.
இதற்கிடையே, தி.மு.க., அரசுக்கு களங்கம் ஏற்படுத்த இச்செயலை செய்ததாக, அ.தி.மு.க.,வின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது தி.மு.க.,வினர் புகார் தெரிவித்துள்ளனர்.துளசியம்மாளை துாண்டிவிட்டு, நடத்துனருடன் பிரச்னை செய்ய வைத்து, அதை வீடியோவாக பதிவிட்டு, சமூகவலைதளங்களில் பரப்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து (132)

 • baala - coimbatore,இந்தியா

  இங்கு கருத்து எழுதுபவர்களின் எத்தனை பேர் அரசு கொடுத்த இலவசங்களை வாங்காமல் திருப்பி கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்

 • Elamathivanan Era -

  சபஷ் சரியான சாட்டையடி

 • அப்புசாமி -

  எல்லாம் அதிமுக ஐ.டி விங்கின் ஏற்பாடுதான். இல்லேன்னா இந்தக் கிழவியாவது காசு குடுத்து டிக்கெட் வாங்குறதாவது. தமிழ்க்கிழவி.

 • Venkat - Chennai,இந்தியா

  பாஜக காரர் வீட்டில் குண்டு போட்டீங்கன்னா அவனே போட்டுக்கொண்டான் என்பீர்கள். எல்லாவற்றிற்கும் இப்படியே விதண்டாவாதமாக குதர்க்கமாக எடுத்து விட்டால், பிறகு எதிராளியும் உன் பானியையே பின்பற்றுவார்கள். கல்விக்கடன் ரத்து என்றாயே, அதை பற்றி பேசுகிறாயா? சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் தருவேன் என்றாயே, அதை பற்றி பேசுகிறாயா? பெண்களுக்கு ஆயிரம் என்றாயே, அதை பற்றி பேசுகிறாயா? தாலிக்கு தங்கத்தை ரத்து பண்ணி விட்டு படிக்கும் பெண்களுக்கு உதவி தொகை என்றாயே அதையாவது கொடுப்பாயா? எம் ஜி யார் என்ற நல்லவர் இருந்தபோது அவரை அசைக்க முடியவில்லை. அதே போல இப்போது அண்ணாமலை என்று ஒரு நல்லவன் வந்து இருக்கிறான். அவனுக்கு பதில் சொல்லு. அவன் சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லு பார்க்கலாம் திருட்டு கூட்டமே. பெரியார், பெரியார் என்று வாய் கிழிய சொல்லுவாயே, அவரே திருட்டு முன்னேற்ற கூட்டதை பற்றி அசிங்கமாக மரண சாசனம் 21 ம் பக்கத்தில் சொல்லியிருக்கிறாரே, இனி பெரியார் சொன்னார் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சொல்லுவாயா ?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இது செட் அப்பாக இருந்தாலும், இதை முன்மாதிரியாகக் கொண்டு பெண்கள் இந்த பஸ்பயணத்தை லுறக்கணித்து, தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் எங்களிடம் ஒட்டுப்பிச்சை வாங்கி வந்த உங்களுக்கு எங்களை ஓசி என்று சொல்ல என்ன தகுதி உள்ளது என்று நிறுத்தி வைத்துக் கேட்க வேண்டும் . ஒன்று கவனிக்க வேண்டும், நீட் ரத்து தோல்வி, கள்ளக்குறிச்சி, கொடநாடு, எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்ட இரு கொடுக்கல் தத்துவம் புரிகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement