dinamalar telegram
Advertisement

நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு தி.மு.க., நிர்வாகிகள் அறிவிப்பு

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக, இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த மதுரா செந்தில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.,வில் மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான மனுதாக்கல் முடிந்து, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பதவியில் இருந்த மதுராசெந்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:

மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, மாவட்ட செயலாளர் மதுராசெந்தில், துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, சாந்தி, பொருளாளர் ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ், ரங்கசாமி, வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், திருநாவுக்கரசு என்கிற பழனியப்பன், சிவக்குமார், வேலுமணி, ரவிச்சந்திரன், இந்திராணி ஆகியோர் நியமிக்கப்பட்டு, கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இருந்ததில், அவைத்தலைவர் பதவி தவிர, அனைத்து நிர்வாகிகளும் மாற்றம் செய்யப்பட்டதை, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள், திருச்செங்கோடு பழைய ஸ்டாண்ட் அருகில் உள்ள அண்ணாதுரை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில் நகராட்சி சேர்மன் நளினி, ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement