Advertisement

வெளிப்படைத்தன்மையுடன் சங்கம் செயல்படும் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் சங்க தலைவர் உறுதி

''வெளிப்படைத் தன்மையுடன் சங்கம் செயல்படும்,'' என்று சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் புதிய தலைவர் சுந்தர்ராஜன் பேசினார்.
நாமக்கல்லில் சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷனின், 2022-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 33வது மகா சபை கூட்டம், நேற்று பொம்மைகுட்டை மேட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில், புதிய நிர்வாகிகளுக்கு, எம்.எஸ்.ஜ.டி., நிறுவனர் முருகேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைவராக சுந்தர்ராஜன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக அம்மையப்பன், உப தலைவராக பன்னீர்செல்வம், துணை தலைவராக பிரபாகர், இணை செயலாளராக கோபி, துணை செயலாளராக கொளசிகன் ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். விழாவில், சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தர்ராஜன் பேசியதாவது:

கோ-டிஜிட்டலில் இன்ஸ்சூரன்ஸ் செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு, பி.எல்.ஐ., சி.எல்.எல்., பாலிசி இலவசமாக. சங்கத்தின் சார்பில் செய்து கொடுக்கப்படும், இதில் ஒவ்வெtரு உறுப்பினரும் பயனடைய வேண்டும், எந்த குறைபாடும் இல்லாமல், சங்கம் வெளிப்படைத் தன்மையாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமரசாமி, நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் வாங்கிலி, டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சின்னுசாமி, கொங்கு வேளாள கவுண்டர் பேரவை தலைவர் தேவராஜன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், எம்.பி., சின்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின் நடந்த கூட்டத்தில், எல்.பி.ஜி., வாகனங்களுக்கு கான்டிராக்ட் காலத்தை, ஆயில் நிறுவனங்கள் மேலும், 3 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement