dinamalar telegram
Advertisement

தமிழ்நாடு டு கேரளா: கேரளா டு தமிழ்நாடு; திரும்ப வந்த ராகுல்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கூடலூர்: கேரளாவில் பல்வேறு பகுதிகளில் ராகுல் நடைபயணம் மேற்கொண்டர். இதையடுத்து,இன்று (செப்.,29) காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தார்.

தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரையிலான 3750 கி.மீ., தூரத்தை 150 நாட்களில் நடைபயணமாக கடக்கும் 'பாரத் ஜோடோ' யாத்திரையை ராகுல் தலைமையில் காங்., கட்சியினர் துவக்கி உள்ளனர். நடைப்பயணம் 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களை கடந்து செல்கிறது.

இதற்கான நடைபயணத்தை கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கினர்.நான்கு நாட்கள் தமிழகத்தில் , நடைபயணத்தை முடித்து விட்டு, 11ம் தேதி கேரளா மாநிலத்தில் நடைபயணத்தை துவங்கினார் . கேரளாவில் பல்வேறு பகுதிகளில் ராகுல் நடைபயணம் மேற்கொண்டர்.இதையடுத்து,இன்று (செப்.,29) காலை நீலகிரி மாவட்டம் கூடலூர் வந்தடைந்தார். அவருக்கு, தமிழக - கேரளா எல்லையான கீழ்நாடுகாணியில், தமிழக காங்., தலைவர் அழகிரி தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோழிபாலம் அரசு கல்லூரிக்கு சென்றார்.
அங்கு, கட்சி நிர்வாகிகள், தேயிலை விவசாய தொழிலாளர்கள், தன்னார்வலர்களை சந்தித்தார். இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு கோழிபாலம் அரசு கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் இருந்து, கூடலூர் நோக்கி நடை பயணத்தை துவங்கினார். நடைபயத்தில், அவருடன் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏறாளமானவர் பங்கேற்றுள்ளனர். மாலை கூடலூரில் நடைபெறும் கூட்டத்தில் ராகுல் பேசுகிறார்.



வாசகர் கருத்து (21)

  • kulandai kannan -

    போன மச்சான் திரும்பி வந்தார்..

  • sankaseshan - mumbai,இந்தியா

    தண்ட செலவு தன்னுடையவும் தொண்டர்களின் நேரத்தையும் veenatikkum

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    உங்க ஆட்கள் நெறய உள்ள தூத்துக்குடி இல்லைனா கன்னியாகுமரி ல ஈசியா ஜெயிக்கலாம் பாஸ்,

  • Soumya - Trichy,இந்தியா

    நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவைற்ற

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    அவன் போகும் இடங்களில் எல்லா,,ஹெரால்ட் ஊழலை பற்றி கேளுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement