dinamalar telegram
Advertisement

சேலம் வழியே செல்லும் ராமேஸ்வரம் ரயில் நீட்டிப்பு

சேலம் வழியே செல்லும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மேலும், 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹூப்ளி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சனிதோறும் காலை, 6:30க்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூர் வழியே ஞாயிறு காலை, 6:15 மணிக்கு ராமேஸ்

வரத்தை அடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறு இரவு, 9:00 மணிக்கு கிளம்பி, சேலம் வழியே மறுநாள் இரவு, 7:25க்கு ஹூப்ளியை அடையும். செப்., 30 வரை அறிவிக்கப்பட்டிருந்த இச்சிறப்பு ரயில், டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
சிறப்பு ரயில்
பயணியரின் கூட்ட நெரிசலை குறைக்க, எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், செப்., 29(இன்று), அக்., 20ல், இரவு, 9:00 மணிக்கு புறப்பட்டு, கோவை, ஈரோடு, சேலம் வழியே மறுநாள் காலை, 9:20 மணிக்கு சென்னையை அடையும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், செப்., 30(நாளை) அக்., 21ல், மாலை, 3:10 மணிக்கு கிளம்பி, மறுநாள் காலை, 3:20க்கு எர்ணாகுளத்தை அடையும். இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement