தொடர்ந்து புகையிலை விற்ற 74 பேர் வங்கி கணக்கு முடக்கம்
சேலம் மாநகர், மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட, 74 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர்.
சேலம் மாநகர், மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக, இரு மாதங்களில், 245 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு, கைது நடவடிக்கைக்கு பின்பும், பள்ளி, கல்லுாரி மாணவர்களை, 'குறி' வைத்து குட்கா விற்றதாக சேலம் மாநகரில், 87 கடைகளுக்கும், மாவட்டத்தில், 77 கடைகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், போலீசார், 'சீல்' வைத்தனர். அதற்கு பின்பும் திருந்தாமல், தொடர்ந்து போதை பொருட்கள் விற்றவர்களில் சேலம் மாநகரை சேர்ந்த, 35 பேர், மாவட்டத்தை சேர்ந்த, 39 பேர் என, 74 பேரின் வங்கி கணக்குகளை, போலீசார் முடக்கம் செய்து, அவர்களின் பணப்பரிமாற்றத்துக்கு தடை விதித்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!