சேலத்தில் தாறுமாறாக ஓடிய காரால் விபத்து; தந்தை பலி; மகள் உள்பட 4 பேர் படுகாயம்
சேலம், நெய்க்காரப்பட்டியை சேர்ந்த, ராஜூ மகன் பிரவீன்குமார், 35. இவர், நேற்று மதியம், 2:30 மணிக்கு, 'பஜிரோ' காரை, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி ஓட்டி வந்தார். சேலம், சீலநாயக்கன்பட்டி, தட்சணாமூர்த்தி கோவில் அருகே வந்தபோது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், திருச்சி பிரதான சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு பாய்ந்தது. அப்போது, நாமக்கல் நோக்கிச்சென்ற, 'அப்பாச்சி' பைக்கில் மோதியும் நிற்காமல், தொடர்ந்து, 'யாரிஸ்' கார், ஆக்டிவா மொபட் மீது அடுத்தடுத்து மோதிய பின் சாலையில் நின்றது.
இதில், 'அப்பாச்சி' பைக்கை ஓட்டிவந்த, தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், 30, அவரது தங்கை சேஷா ஆனந்தி, 25, 'யாரிஸ்' காரை ஓட்டி வந்த, ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் போர்டை சேர்ந்த கவுதம், 28, ஆக்டிவா மொபட்டில் வந்த தர்மலிங்கம், 45, அவரது மகள் அனுஜா, 15, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தர்மலிங்கம் உயிரிழந்தார். அவரது மகள் அனுஜா, கவலைக்கிடமான நிலையில் உள்ளார். நவநீதகிருஷ்ணன், சேஷா ஆனந்தி, கவுதம் ஆகியோர், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன்குமாரிடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால், ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!