dinamalar telegram
Advertisement

ஒன்றிய கூட்டம்; கவுன்சிலர்கள் மவுனம்

ADVERTISEMENT


பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு கூட்டத்தில், பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதி பிரச்னைகளை முன்வைக்காமல் அமைதியாக கூட்டத்தில் பங்கேற்றுச்சென்றனர்.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் லட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் சண்முகசுந்தரம், ஆணையாளர் ஜென்கின்ஸ், கிராம ஊராட்சிகள் பி.டி.ஓ., லதா மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இதில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மானங்களில் முக்கியமானதாக, கோலார்பட்டி, வக்கம்பாளையம், வீரல்பட்டி, தொண்டாமுத்துார், சீலக்காம்பட்டி பகுதிகளில், பழுதான பள்ளி கட்டடங்கள், நிழற்கூரைகளை இடித்து அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், எட்டு ஊராட்சிகளில் மண் புழு உரக்கொட்டகை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், சுகாதாரத்துறை, மின்வாரியம் உள்பட பல அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சில கவுன்சிலர்கள் பிரச்னைகளை முன்வைத்து பேசினர்.
கவுன்சிலர்கள் பேசுகையில், 'பகுதி வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில், அதிகப்படியாக தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு ஒதுக்கப்படுகிறது.இந்த நடைமுறையை மாற்றி, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் சரிசமமாக நிதி ஒதுக்க வேண்டும். கோலார்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் பாதிக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தினர்.பெரும்பாலான கவுன்சிலர்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரச்னைகளை பேசாமல், மக்கள் கோரிக்கைகளை முன்வைக்காமல், 'மவுனம்' காத்தனர்.
எதுவுமே பேசாமல், கூட்டத்தில் பங்கேற்றுச்சென்றனர்.இதனால், ஒன்றியக்குழு கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதி வளர்ச்சிக்காக பணியாற்றுகிறார்களா என்ற, கேள்வி எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement