விடுமுறை நாளில் பணி இரட்டிப்பு சம்பளம் கேட்பு
வால்பாறை : விடுமுறை நாளில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும், என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், பல்வேறு எஸ்டேட்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கூட தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து, எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகையில், 'தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு, அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக்கூலி, 425.40 ரூபாய் வழங்கப்படவில்லை. தற்போது, தினக்கூலியாக, 406.80 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாளில் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு, அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் இரட்டிப்பு சம்பளம் வழங்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!