dinamalar telegram
Advertisement

பஸ் கண்ணாடி உடைப்பு; காரைக்காலில் இருவர் கைது

ADVERTISEMENT
காரைக்கால் : காரைக்காலில், தேசிய புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தியதை கண்டித்து, அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், பச்சூர் அருகே அரசு பஸ் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவர் கல்வீசி தாக்கினர். அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும், டிரைவர் மற்றும் நான்கு பயணிகள் காயமடைந்தனர்இதுகுறித்து டிரைவர் ஆச்சியப்பன் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் கிடைத்த தகவலின் பேரில், பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நிரவியை சேர்ந்த முகமது ஆஷிக்,28; முஸ்தபா கமால் வீதியைச் சேர்ந்த முகமது பக்ருதீன்,35; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், காரைக்காலில் தேசிய புலனாய்வு குழுவினர் சோதனை நடத்தியை கண்டித்து பஸ் மீது கல்வீசி தாக்கியதை ஒப்புக் கொண்டனர்.அதன்பேரில் போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement