dinamalar telegram
Advertisement

குடிசைமாற்று ஊழியர்கள் முரசு கொட்டி போராட்டம்

ADVERTISEMENT
புதுச்சேரி : குடிசைமாற்று வாரிய ஊழியர்கள் நிலுவை ஊதிய பிரச்னையை வலிறுத்தி முரசு கொட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் நிலுவை ஊதியம், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் கடந்த 16ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சம்மேளனம் செயலவை உறுப்பினர் சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், முரசு கொட்டி தங்களின் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement