பா.ஜ., எம்.எல்.ஏ., விற்கு மிரட்டல்; ஆதரவாளர்கள் போலீசில் புகார்
புதுச்சேரி : எம்.எல்.ஏ., ஜான்குமாரை மொபைல் போனில் அவதுாறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமாரின் ஆதரவாளர்கள் நேற்று, பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர். அதில்,ஜான்குமார் எம்.எல்.ஏ.,வை வில்லியனுார் அடுத்த உளவாய்க்காலை சேர்ந்த சந்திரசேகர், மொபைல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டி, அவதுாறாக பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!