தென்காசி தி.மு.க., தேர்தல் முடிவு நிறுத்தி வைப்பு
தென்காசி:தென் மாவட்டங்களில் நடந்து வரும் தி.மு.க., உட்கட்சி தேர்தலில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படவில்லை. குறிப்பாக அமைச்சர்களாக இருக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் மீண்டும் தொடர்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலும் மத்திய மாவட்டம் அப்துல் வஹாப், கிழக்கு ஆவுடையப்பன் ஆகியோர் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆகின்றனர்.தென்காசி தெற்கு மாவட்டத்தில் சிவ பத்மநாதன் மீண்டும் மாவட்ட செயலாளர் ஆகிறார். தென்காசி வடக்கு மாவட்டத்தில் செல்லத்துரைக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் திடீரென ராஜபாளையத்தை சேர்ந்தவரும் தென்காசி தி.மு.க., எம்.பி.யுமான தனுஷ்குமார் போட்டியில் இருப்பதாக கூறப்பட்டது.

இதற்கு செல்லத்துரை ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் தி.மு.க., தலைமைக்கு எதிராக தென்காசி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட அறிவிப்பை கட்சி தலைமை தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை மீண்டும் மாவட்ட செயலாளராக அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் செல்லத்துரை தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!