dinamalar telegram
Advertisement

தீ வைப்பு, பஸ் உடைப்பு: மூவர் கைது நால்வருக்கு போலீஸ் வலை

கோவை:கோவையில் ஹிந்து முன்னணி பிரமுகர் காருக்கு தீ வைத்தது தொடர்பாக, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை குனியமுத்துாரில், கடந்த 23ல் ஹிந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தியாகு வீட்டில், அவரது கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.இது தொடர்பாக மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிந்த குனியமுத்துார் போலீசார், எஸ்.டி.பி.ஐ., கட்சியை சேர்ந்த ஜேசுராஜ், 34, இலியாஸ், 34 ஆகியோரை கைது செய்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய, குனியமுத்துார் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அம்ரிஷ் கான், 29, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அஜீஸ் பாய், அசாருதீன், அவரது நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.அதுபோல, கடந்த 22ல், புட்டுவிக்கி சந்திப்பில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கல் வீசி தாக்கி கண்ணாடியை உடைத்த இருவரும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
கரும்புக்கடையை சேர்ந்த முகமது ஷாருக், முகமது இத்ரிஸ் ஆகிய இருவரும் கைது செய்யப் பட்டு உள்ளனர்.சம்பவத்துக்கு பயன்படுத்திய மோட்டர் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அம்ரிஷ் கான், முகமது ஷாருக், முகமது இத்ரிஸ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement