ADVERTISEMENT
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகம் அப்புராஜபுரம்;புத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைமதி, சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு காதல்திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு பிரிந்து வாழ்ந்துள்ளனர்.
2019 மே 12ஆம் தேதி சதீஷ்குமார் தனது மனைவினை சேர்ந்துவாழ அழைத்தபோது கலைமதியும் அவரது தந்தை நாகராஜன் சேர்ந்து சண்டைபோட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த நாகராஜன் கத்தியால் சதீஷ்குமாரை குத்தியுள்ளார். கலைமதி கல்லால் அடித்துள்ளார் . இதில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழயில் சதீஷ்குமார் இறந்துள்ளார்.

இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் சதீஷ்குமாரை கொலை செய்த நாகராஜன(60), கலைமதி(30) ஆகியோருக்கு ஆயுள்தண்டனையும், தலா ரூ 11 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோவன் தீர்ப்பு வழங்கினார். கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 5வது ஆயுள்தண்டனை வழக்காகும். அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜரானார்.
ஆயுள் தண்டனை, கொசுறு அபதாரம் வேற...