வேலுார் மாவட்டம், ஒடுக்கத்துார் அடுத்த சின்ன பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சதீஷ். டைலர். இவர் மனைவி நந்தினி. மகன் துர்காபிரசாந்த், 13, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிதார். கடந்த 25 ம் தேதி மாலை 5:00 மணிக்கு, பாக்கம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் வீட்டுக்கு துர்காபிரசாத் சென்ற போது, மது போதையில் பைக்கில் சென்ற ஒருவர் மாணவர் மோதி விட்டு தப்பியோடினார்.
படுகாயமடைந்த துர்காபிரசாத் வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க பெற்றோர் சம்மதித்தனர். இதையடுத்து மாணவர் கல்லீரல், சிறுநீரகம் ஒன்று சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும், மற்றொறு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் சிறப்பு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
வேலுாரிலிருந்து சென்னை 145 கி.மீ., மூன்று மணி நேரம் ஆகும். ஆனால் போலீசார் வழிநெடுக சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்ததால், இரண்டு ஆம்புலன்சுகளும் இரவு 6:40 மணிக்கு புறப்பட்டு 8:00 மணிக்கு ஒரு மணி 20 நிமிட நேரத்தில் மின்னல் வேகத்தில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.
வாசகர் கருத்து (4)
ஏமாளிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
எங்கேயாவது ஒரு துலுக்கன் உடல் உறுப்பு தானம் செய்ததாக இதுவரை கேள்விப்பட்டதுண்டா?
அந்த சின்ன குழந்தை எத்தனை கனவுகள் வைத்திருந்தானோ......