dinamalar telegram
Advertisement

மின் துறை தனியார் மயத்திற்கு ஊழியர்களே காரணம்: நமச்சிவாயம்



புதுச்சேரி, : ஊழியர்கள் பலமுறை அழைத்தும் பேச்சுவார்த்தைக்கு வராததால், மின்துறை தனியார் மய விவகாரத்தில் அரசு முடிவெடுத்ததாக அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி அரசு மாநில வளர்ச்சிக்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மின் தடை ஏற்படாத வகையில் அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.தனியார் மய விவகாரத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் ஆட்களை நியமித்து மின் தடை இல்லாத வகையில் சரி செய்யப்படும்.தன்னிச்சையாக மின் துறையை தனியார் மயமாக்குவதாக கூறுவது தவறு. இந்நிலைக்கு வருவதற்கு முன்பே ஊழியர்களை பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அவர்கள் வரவில்லை. கருத்து கேட்புக் கூட்டத்தில் கூட பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். அதன் பிறகே அரசு முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.என்.ஆர் காங்., அரசு கொறடா ஆறுமுகம் பா.ஜ., எம்.எல்.ஏ., க்கள் ராஜினாமா செய்து, தேர்தலில் நிற்கட்டும் என கூறியதை தவிர்த்திருக்கலாம்.

இரு தரப்பிலும் ஒருமித்த கருத்துடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு எங்காளால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என தேர்தலுக்கு பிறகு பேசுவதை தவிர்த்திருக்கலாம். இருப்பினும், அவர்கள் சபாநாயகர் மற்றும் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து பேசுவதாக கூறியுள்ளனர். எனவே, இது தொடர்பாக நாங்கள் கலந்து பேசுவோம்.எங்களுக்குள் சுமூக உறவு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் முதல்வர் ரங்கசாமிதான். அவரே, எங்கள் கூட்டணிக்கு இன்றைக்கும் தலைவராகவும், முதல்வராகவும் உள்ளார். அவருக்கு எங்களது ஆதரவு தொடர்ந்து உண்டு. என்.ஆர்.காங்.,-பா.ஜ., கூட்டணி அரசு எவ்வித இடையூறின்றி 5 ஆண்டு ஆட்சி பூர்த்தி செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement