Advertisement

பெற்ற தாயை பராமரிக்காத தொழிலதிபருக்கு சிறை நடவடிக்கை எடுக்காத போலீசார்

தூத்துக்குடி:தாயாருக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட்ட கோட்டாட்சியரின் ஆணையை செயல்படுத்தாத தூத்துக்குடி தொழிலதிபருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி மில்லர்புரம் காந்திநகரை சேர்ந்தவர் ஆர்.பார்த்திபன் 54. பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது தாயார் கமலா 85. கடந்த ஆண்டு தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்தார். அதில் தனக்கு மகன் பார்த்திபன் மாதம் தோறும் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மனுவை விசாரித்த கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், கமலாவுக்கு மகன் பார்த்திபன் மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். பார்த்திபன் பராமரிப்புத்தொகை வழங்கவில்லை. கமலா கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்தார்.
இருவரையும் அழைத்து விசாரித்த கோட்டாட்சியர், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007 பிரிவு 4(3)ன் படி பராமரிப்பு தொகை வழங்காத தொழிலதிபர் பார்த்திபனுக்கு, 3 மாத சிறைத்தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை செயல்படுத்துமாறு செப். 12ல் தூத்துக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு நகல் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement