Advertisement

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா கொடியேற்றம்

ADVERTISEMENT
திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருச்செந்துார் அருகே கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளது முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் கோவில்.ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது இங்கு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருப்பர். காளி உள்பட பல்வேறு வேடமிட்டு காணிக்கை பெறுவர்.விஜயதசமியன்று குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவில் நடக்கும் மகிஷாசுர சம்ஹார நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்பர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிபட்டம் வீதி உலா வந்தது. காலை 9:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.
நேற்று இரவு சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் கோலத்தில் எழுந்தருளினார். அக்., 5 வரை தினமும் அபிஷேக, ஆராதனை, இரவில் வீதி உலா நடக்கிறது. அக்., 5ல் மகிஷாசுர சம்ஹாரம் நடக்கிறது.திருநெல்வேலி டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் 300 போலீசார், ஊர்க்காவல் படையினர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement