பயணிக்கு நெஞ்சு வலி காப்பாற்றிய வீரர்கள்
சென்னை : மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சேகர் ஹஸ்ரா, 69. இதய நோயாளியான இவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, சென்னை வந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது, சேகருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த, சி.ஐ.எஸ்.எப்., என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்பரிசோதித்ததில், சேகரின் நாடித் துடிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது.இதையடுத்து, உயிர் காக்கும் அவசர உதவி வழங்கினர். இருந்தும், அவரது துடிப்பு தொடர்ந்து குறைந்துள்ளது.
இதையடுத்து, அருகில் இருந்த சி.ஐ.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் எட்வின் ஷாம் மற்றும் உதவி இன்ஸ்பெக்டர் வைகுண்டம் இணைந்து, மார்பு பகுதியை இரு கைகளால் அழுத்தி, சேகருக்கு மீண்டும் உயிர் காக்கும் அவசர உதவி செய்தனர்.இதில், சேகரின் நாடித்துடிப்பு உயர்ந்து சீரானது. இதையடுத்து, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சேகரின் உடல் நிலை சீராக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!