dinamalar telegram
Advertisement

மோசடி பத்திரிகையாளர்: தகவல் தர கலெக்டர் அழைப்பு

ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: பத்திரிகையாளர் பெயரில் சில நபர்கள், தங்களுக்கு உயரதிகாரிகளை தெரியும் எனக்கூறி, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மக்களிடம் மனுக்களை பெற்று, ஏமாற்றி, பணம் பறிப்பதாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு வரப்பெற்றுள்ளது.
கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்களின் முன், பத்திரிகையாளர் பெயரில் சில நபர்கள் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி, மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.

அரசு அலுவலர்களிடம், பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை, சிபாரிசு செய்யும் நபர்கள் பற்றி, தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து, 94980-42428 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆதாரத்துடன் தகவல் அனுப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement